வியாழன், 4 மார்ச், 2010

ஹோசன்னா...

Hosanna lyrics

Song : Hosanna
Movie : Vinnaithandi varuvaaya
Music : A.R.Rahman
Lyrics : Thamarai

[Vijay Prakash]

ஏன் இதயம் உடைத்தாய், நொறுங்கவே!?
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே!

[Chorus]
Ohhh... Hosannah... Hosannah.. Oh ho ho..
Ohhh... Hosannah... Hosannah.. Oh ho ho..

[Vijay Prakash]
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே..
ஒ வானம் தீண்டி வந்தாச்சு அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே ..
Hosannah.. என் வாசல் தாண்டி போனாளே... Hosannah.. வேறொன்றும் செய்யாமலே...
நான் ஆடி போகிறேன்... சுக்குநூராகிரேன் .. அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன் ..

Hosannah.. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன் ..
Hosannah.. சாவுக்கும் பக்கம் நின்றேன் ..
Hosannah.. ஏன் என்றால் காதல் என்பேன் .. Hosannah.. Oh ho..

[Blaaze]
Everybody wanna know how I feel like, feel like, I really wanna be here with you.
Its not enough to say that we are made for each other its love that is Hosannah true.
Hosannah, will be there when you're calling out my name.
Hosannah, feeling like my whole life has changed.
I never wanna be the same, its time we rearrange.
I take a step, you take a step and I'm here calling out to you..
Helloooo, Halloooo, Halooo.. Hosannah..

Hosanna.. Oh ho ho ho...
Hosanna.. Oh ho ho ho...

[Vijay Prakash]
வண்ண வண்ண பட்டுபூச்சி பூத்தேடி பூத்தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே
Oh சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கு எங்கோ நகர்கின்றதே
Hosanah, பட்டுபூச்சி வந்தாச்சா? Hosanaaa, மேகம் உன்னை தொட்டாச்சா
கிழிஞ்சல் ஆகிறாய் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்திகொள்கிறேன்
Helloooo, Halloooo, Halooo.. Yooo.. Hosannah..

Hosanah, ஏன் மீது அன்பு கொள்ள
Hosanah, என்னோடு சேர்ந்து செல்ல
Hosanah, ம் என்று சொல்லு போதும்
Hosanah, oh ho

[Vijay Prakash]
ஏன் இதயம் உடைத்தாய், நொறுங்கவே!?
என் மறு இதயம் , தருவேன் நீ உடைக்கவே!



Extra Lyrics
Naetru unnai paarthaene, paartha pinnae endhan kangal
Unnizhalil otti chella
Kangal thaedi kangal thaedi saalai ellaam selai thaedi
Kandukondaen kaadhal kolla

En anbe, Meendum ennai vittu odi
Kannaamoochi, Vaendumendre neeyum aadi
Irandhaen oar nodi, Pirappaen Naanadi
Un mellidhazhil millimeter punnagai kasindhaalae
Hello Hellooooo Hello Hellooooo

Hosannah, Kaagidhamaai maarinaene
Hosannah, Kaaladiyil kasangi naane
Unnalae, Kaagidhappo pookkaadho. Hosannah..

செவ்வாய், 9 ஜூன், 2009

சொல்லிவிட்டாள்...

இவ்வளவு நாள் மனதிற்குள் அடைத்திருந்ததை சொல்லிவிட்டாள்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது......

என்னமோ பெரிய பாரம் மனதை விட்டு போனதை போன்ற ஒரு சுகம்
மனதிற்குள் ஒரு பெருவெள்ளம்...

அவள் மேல் இருந்த அன்பும் பாசமும் ஒரே அடியாய் ஆயிரம் மடங்கு அதிகமானதை போன்ற ஒரு உணர்வு....

அவள் கையை பிடித்தாலும் சொர்க்கம் அடைந்த சுகம் தெரிகிறது....

முன்பை போன்றிள்ளாது அவளும் பாசத்தை காட்டுகிறாள்...

இதுவரை சொல்லாத வார்த்தைகளையும் அன்பையும் பொழிகிறாள்..

மனம் அந்த சுகத்தை ரசிக்கிறது...
பொழியும் ஒவ்வொரு முத்தத்திலும் ஒரு புது சுகம்.....
பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் புது அர்த்தத்தை தருகிறது....

நரம்பெல்லாம் வீணை வாசிக்கின்றன....
விரல்களெல்லாம் நடுங்குகின்றன...
உதடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை பிடிக்கின்றன..
வய்ற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன

என்னை தவிர வேறு எவரும் இவ்வளவு சந்தோசமாக இங்கு இருக்கவே முடியாது...

ஹாரிஸ் ஜெயராஜின் 'உயிரே என் உயிரே' எங்கேயோ ஒலிப்பது கேட்கின்றது...


வியாழன், 21 மே, 2009

வெள்ளை பூக்கள்....

Song: Vellai pookal
Movie: Kannaththil Muththamittal
Lyrics: Vairamuthu
Singer: A R Rahman

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையில் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனைகள் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே

புதன், 1 ஏப்ரல், 2009

மனம்

மனம் ஒரு படியினை எட்டிவிட்டது ...
நீ இல்லாவிட்டலும் பரவாயில்லை என்கின்றது...
உள் மனம் உன்னை ஆழமாக நேசித்தாளும்..
வெளியே அது உன்னை மறுக்கின்றது....
நீயும் அதை அறிவாய்...
நானும் நன்கு அறிவேன்...
இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்கின்றோம்...
இது என்ன விதியா?
இல்லை மூடத்தனமா ?
நீயே சொல்லடி.... என் கண்மணி...

வெள்ளி, 13 மார்ச், 2009

நீ....

உன்னை நான் அடையத்தான் தவிக்கிறேன்...
தினமும் நினைத்து ஏங்குகிறேன்...
ஒரு நொடி என் விழிவிட்டு நீ பிரிந்தாலும்...
ஓர் வாழ்நாள் பிரிவை உணர்கின்றேன்...
என் அருகில் இரு...
என்னை அரவணை...
என் வாழ்வை முழுமையாக்கு....
நீ எனதாகு....

வியாழன், 20 நவம்பர், 2008

நான்....

எனது cubicle இல் நான்....
காலையில் type பண்ண தொடங்கியது....
இன்னும் முடியவில்லை...
நேரமோ அந்தி ஏழு மணி ஆகிவிட்டது...
வேலை வேலை வேலை......
ஏன் இந்த அவல நிலை....
யாருக்காக வேலை செய்கின்றேன்....???
எதை நான் சேமித்தேன்....??
எனக்க்காகவா வேலை செய்கின்றேன்....??
யாரை மகிழ்விக்க இந்த ஓட்டம்....?
எடுக்கும் சம்பளமோ ஒரு கிழமையைவிட கையில் தங்குவதில்லை...
வங்கிகளின் தொல்லை ஒரு பக்கத்தில்....
ஒரு சதம் ஏனும் சேமிக்காத எரிச்சல் மறுபக்கத்தில்....
மீண்டும் 25 எப்போ வரும் என மனம் ஏங்கிக்கொண்டிருக்கின்றது...
எப்போது வரும் விடியல்.....???

செவ்வாய், 18 நவம்பர், 2008

என் குரல்....

அனைவருக்கும் வணக்கம்..!!!

இதோ என் குரல் இணையத்தில்....
வெகு நாளாக அடங்கி இருந்த என் குரல் மீண்டும் ஒரு புது பரிணாமத்தை காண போகின்றது....
என் சொற்கள், சிந்தனை, அது, இது அனைத்தும் இதில் பதிய போகின்றது....